• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆனந்த் – ராதிகா திருமண கொண்டாட்டம்… விழாக்கோலமாக மாறிய முகேஷ் அம்பானியின் இல்லம்…

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆனந்த் – ராதிகா திருமண கொண்டாட்டம்… விழாக்கோலமாக மாறிய முகேஷ் அம்பானியின் இல்லம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகமே வியக்கும் வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 13 ஆம் தேதி ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அம்பானியின் மும்பை இல்லம் விழா கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக தாய்மாமன் சீதனம் பெறும் நிகழ்ச்சிக்காக வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12- ஆம் தேதி நடைபெறுகிறது.

விளம்பரம்

இதையொட்டி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. கடந்த 3 மாதங்களாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக தலைவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முகேஷ் அம்பானியும் , நீடா அம்பானியும் தர்ம காரியங்கள் பலவற்றை செய்து வருகிறார்கள். குறிப்பாக மகனின் திருமணத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அம்பானி குடும்பத்தினரால் ஏராளமான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏழ்மை நிலையில் இருக்கும் 50 ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்  குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியா கோலாகலமாக தொடங்கியது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். அந்த நிகழ்வின்போது, பாரம்பரிய ஆடைகள், நகைகள் உள்ளிட்டட பல பொருட்கள் மணமகள் ராதிகா மெர்ச்சென்டிற்கு அளிக்கப்படும்.

விளம்பரம்

அதன்படி இனிப்பு, புடவை, நகைகள் வெள்ளை நிற வளையல்கள்,
மற்றும் உலர் பழங்களுடன் மணமகளின் தாய் மாமா
அவரை சந்தித்தார். இந்த சடங்கு மணமகள் தனது புதிய பயணத்தைத் தொடங்கும்போது தாய்வழி குடும்பத்தின் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துகளையும் பெறுவதை குறிக்கிறது.

 

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்காக முகேஷ் அம்பானியின் இல்லம் பூக்கள் மற்றும் விளக்குகளால் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன, அதில் குடியிருப்பு அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு மலர்களால் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் அழகை அதிகரிக்க சுற்றிலும் தங்க விளக்குகளும் போடப்பட்டுள்ளன. ஆனந்த் மற்றும் ராதிகாவின் கார்ட்டூன்கள் கொண்ட டிஜிட்டல் திரையும் வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

சமூக ஊடகங்களில் வெளிவந்த மற்றொரு வீடியோவில், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் அரங்கிற்குள் நுழைவதைக் காணலாம். அவர் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆரஞ்சு நிற லெஹங்கா உடையணிந்து எப்பொழுதும் போல் அழகாக இருக்கிறார். பாரம்பரிய ஜும்காக்கள், மாங்-டீகா மற்றும் நெக்லைன் ஆகியவற்றுடன் அவர் தனது தோற்றத்தால் வசீகரிக்கிறார்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

விளம்பரம்

.



Read More

Previous Post

வெள்ளையாக்கும் க்ரீம்களால் அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்கள்

Next Post

விலையை உயர்த்தும் ஜியோ, ஏர்டெல் – இன்றே இதை செய்தால் ரூ.600 மிச்சம்! – News18 தமிழ்

Next Post
விலையை உயர்த்தும் ஜியோ, ஏர்டெல் – இன்றே இதை செய்தால் ரூ.600 மிச்சம்! – News18 தமிழ்

விலையை உயர்த்தும் ஜியோ, ஏர்டெல் - இன்றே இதை செய்தால் ரூ.600 மிச்சம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin