Last Updated:
Bus Fire Accident | இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரா, மார்க்காபுரத்தில் டிப்பர் லாரியுடன் தனியார் பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 10 பயணிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று ஹைதராபாத்தில் இருந்து 40 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு ஆந்திர மாநிலம் பாமூர் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அந்த பேருந்து ஆந்திராவில் உள்ள மார்க்காபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே சென்றபோது டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அவசரகால வழி மூலமும், ஜன்னல்களை உடைத்தும் பேருந்தில் இருந்து குதித்து வெளியேறி உயிரை காப்பாற்றினர்.


