குடியிருப்பு சொத்துகளை வாங்குவதற்கும், வீட்டை கட்டுவதற்கும் கடன் வழங்கும் ஆதார் ஹவுசிங் நிறுவனம், வணிகச் சொத்து கட்டுமானம் மற்றும் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு கடன்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 98.72% பங்குகளை பிசிபி டாப்கோ நிறுவனமும், ஐசிஐசிஐ வங்கி 1.18% பங்குகளையும் வைத்திருக்கின்றன.
இந்நிலையில், ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.3 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்தது. அதன்படி, ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் பிசிபி டாப்கோ நிறுவனம் ரூ.1,000 கோடி மதிப்பிலான பங்குகளின் புதிய வெளியீட்டையும், ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு ஐபிஓ-வையும் வெளியிட முடிவு செய்தது.
இந்த புதிய வெளியீட்டின் வருவாயில் இருந்து ரூ.750 கோடியை கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்த உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் எதிர்கால மூலதனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 8ஆம் தேதி ஐபிஓ ஆஃபரை தொடங்கி, கடந்த மே 10ஆம் தேதியுடன் விண்ணப்பத்திற்கான அவகாசம் நிறைவடைந்தது.
3 நாட்களின் முடிவில் சில்லறை மற்றும் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களிடம் இருந்து, 25 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பித்த முதலீட்டாளர்கள், அவர்களது டீமேட் கணக்கில், ஒதுக்கப்பட்ட பங்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read :
பெண்கள் வீட்டிலிருந்தே கைநிறைய பணம் சம்பாதிக்க ஈசியான 5 வேலைகள்!
ஒருவேளை பங்குகள் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்கு இன்று முதல் பணம் திருப்பித் தரப்படுவதாகவும் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஐபிஓ பெற்றவர்களின் பட்டியல் வரும் மே 15ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீங்கள் ஐபிஓ ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தால், https://ris.kfintech.com/ipostatus/ என்ற இணையதளத்திற்கு சென்று, ஐபிஓ -வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓவைத் தேர்ந்தெடுத்து, பான் எண், டீமேட் கணக்கு எண் அல்லது விண்ணப்ப எண்ணை உள்ளிட வேண்டும்.
விண்ணப்ப எண், பான் எண் அல்லது டீமேட் கணக்கு எண் என எதை உள்ளீடு செய்தாலும், பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர், உங்களுக்கு எவ்வளவு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, அதன் விலை விவரம் மற்றும் உங்களுக்கு திருப்பி வரக்கூடிய பணம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
.
&w=750&resize=750,375&ssl=1)
