ஆதார் அட்டை தற்போது அனைவருக்கும் ஒரு முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. இந்த ஆதாரை புதுப்பிக்குமாறு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி ஆதாரை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 2023 என்று இருந்த நிலையில் அதனை மார்ச் 14,2024 வரை UIDAI நீட்டித்தது. ஆதார் மையம் மற்றும் மைஆதார் போர்ட்டலில் தங்களது ஆதார் அட்டையை புதுப்பிக்க முடியும். ஆதார் மையம் சென்று புதுப்பித்தால் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும், ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டை: என்னென்ன விவரங்களைப் புதுப்பிக்கலாம்?
மார்ச் 14 வரை யுஐடிஏஐ இணையதளத்தில் ஒருவர் தங்கள் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் பிற மாற்றங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம். நீங்கள் ஆதார் சேவை மையங்களுக்கு (CSC) சென்றால், உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களைப் புதுப்பிக்க ₹50 கட்டணம் விதிக்கப்படும்.
ஆதார் அட்டை: ஆன்லைனில் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்க இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும் :
1. ஆதார் எண்ணைப் பயன்படுத்தி
https://myaadhaar.uidai.gov.in/
இல் உள்நுழைக.
2. ‘முகவரியைப் புதுப்பிக்க தொடரவும்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. பின்னர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை கடவுச்சொல், அதாவது OTP-ஐ உள்ளிடவும்.
4. ‘ஆவணப் புதுப்பிப்பு’ (Document Update) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்லிங்கில் கிளிக் செய்யவும்.
6. கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து பதிவேற்றவும்.
7. பின்னர் சப்மிட் (submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
8: 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்பட்ட பிறகு புதுப்பிப்பு ரெக்வஸ்ட் ( update request) ஏற்கப்படும்.
Also Read : பெண்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த திட்டத்துல சேமித்தால் டபுள் மடங்கு லாபம்!
ஆதார் அட்டை: முகவரிச் சான்றினை எவ்வாறு பதிவேற்றுவது?
1. UIDAI இன் அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்வையிடவும்.
2. லாகின் செய்து “பெயர்/பாலினம்/பிறந்த தேதி மற்றும் முகவரி புதுப்பிப்பு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. “Update Aadhaar Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
4. பின்னர் ‘address’ என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்
5. ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றி தேவையான தகவலை உள்ளிடவும்.
பின்னர் சப்மிட் செய்துவிட்டால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் 10 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உங்கள் ஆதாரில் உள்ள விவரங்கள் புதுப்பிக்கப்படும். பின்னர் உங்கள் புதிய ஆதாரை பெற்று கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…