மார்ச் 2024 என்பது பல்வேறு விதமான பொருளாதார மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட டெட்லைன்களுடன் வருகிறது. வரி சேமிப்பு முதலீடுகள் செய்வது முதல் உங்களது ஆதார் அட்டையை புதுப்பிப்பது போன்ற பலவற்றிற்குமான கடைசி நாள் நெருங்கி வருகிறது. கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக இவற்றை செய்வதை தவிர்ப்பதற்கு முக்கியமான சில இறுதி தேதிகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக Paytm பேமெண்ட்ஸ் வங்கி கஸ்டமர்கள் தங்களது பணத்தை வேறொரு அக்கவுண்டுகளுக்கு மாற்றுவதற்கு 15 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதே நேரத்தில் 14ஆம் தேதி வரை உங்களது ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் இதுபோன்ற அப்டேட்டுகள் செய்வதற்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இதுபோன்ற முக்கியமான தேதிகளை மனதில் வைத்துக் கொள்வதன் மூலமாக உங்களது பொருளாதார மற்றும் தனிநபர் விவரங்களை நீங்கள் திறம்பட நிர்வகிக்கலாம்.
மார்ச் 14 : இலவச ஆதார் விவரங்கள் புதுப்பிப்பு
உங்களது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 14. இந்த தேதிக்கு பிறகு செய்யும் எந்தவிதமான புதுப்பிப்புகளுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
மார்ச் 15 : Paytm பேமெண்ட்ஸ் வங்கி கடைசி தேதி
மார்ச் 15ஆம் தேதிக்குள் Paytm பேமெண்ட்ஸ் வங்கியின் கஸ்டமர்கள் தங்களது பணத்தை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும். ஏனெனில் மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு Paytm வங்கி கணக்குகளில் உங்களால் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது கிரெடிட் ட்ரான்ஸ்ஷாக்ஷன் களை செய்யவோ முடியாது.
அட்வான்ஸ் டேக்ஸ் பேமெண்டிற்கான நான்காவது தவணை:
2023-2024 நிதியாண்டில் உங்களுடைய அட்வான்ஸ் டேக்ஸின் நான்காவது மற்றும் இறுதி தவணையை செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 15.
மார்ச் 31 : வரிசேமிப்பு முதலீடுகள்
2023-2024 நிதியாண்டிற்கு வரி சேமிப்பதற்கான திட்டம் இருந்தால் அது சம்பந்தப்பட்ட முதலீடுகளை செய்வதற்கு மார்ச் 31ஆம் தேதி இறுதி நாளாக அமைகிறது.
Also Read : எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி..!
வருமான வரி தாக்கல் :
2021-22 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2024. எனவே வரி செலுத்துவோர் இந்த நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட ITR அல்லது ITR-U ஐ தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை மார்ச் 31ஆம் தேதி வரை பெறுகிறார்கள். தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் இருந்து 24 மாதங்கள் வரை புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்வதற்கான அனுமதி வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. எனினும், 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரியை வரி செலுத்துவோர் தாக்கல் செய்ய மறந்தால் அவர்கள் அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
FASTag நோ யுவர் கஸ்டமர் அப்டேட் :
Paytm FASTag யூசர்கள் அனுபவித்து வரும் சவால்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாக நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) ‘ஒன் வெஹிகிள், ஒன் FASTag’ திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2024. இதனால், FASTag யூசர்கள் KYC தேவைகளை நிறைவு செய்வதற்கு கூடுதலாக ஒரு மாத கால அவகாசத்தை பெறுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…