Last Updated:
ஆதார், பள்ளி ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆதார், பள்ளி ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ் உட்பட அரசு சார்ந்த சேவைகளை பெற பள்ளி ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
Also Read: தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்த மத்திய அமைச்சர்.. மக்களவையில் கடும் அமளி!
அரசு சேவைகள், பயணம், வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாய ஆவணமாக்கப்பட உள்ளது. ஆகையால் மூத்த குடிமக்கள் உட்பட பொதுமக்கள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய பெயரில் மாற்றங்களை செய்ய 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி கடைசி தேதி என்று மத்திய அரசு அறிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
It is being claimed in social media posts that Union Government has declared April 27, 2026, as the final deadline to apply for birth certificates.#PIBFactCheck
▶️This claim is #Fake
▶️The Union Government has not issued any such communication on deadline regarding birth… pic.twitter.com/dXVgY75mS0
— PIB Fact Check (@PIBFactCheck) March 8, 2025
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் (PIB) வெளியிட்டுள்ள பதிவில், பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது. பிறப்பு சான்றிதழ் தொடர்பாக இதுபோன்ற எந்தவித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று அதில் தெளிவுப்படுத்தி உள்ளது.
March 10, 2025 2:02 PM IST