இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப்பாக தேசிய அடையாள எண்ணான ஆதாரை பயன்படுத்தி எக்கச்சக்கமான மோசடிகள் நிகழ்த்தப்படுகிறது.
பல்வேறு விதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் தனிநபர்களின் விவரங்கள் மற்றும் பொருளாதார தகவல்களை சேகரிக்கின்றனர். ஆதார் தகவல்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஆதார் கார்டு மோசடிகளை தவிர்ப்பதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
-
உங்களுடைய தனி நபர் விவரத்தை பாதுகாப்பதற்கு உங்களின் ஆதார் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை பாதுகாப்பது அவசியம்.
-
உங்களுக்கு பரிச்சயம் இல்லாத கம்ப்யூட்டர்களில் சேகரிக்கப்பட்ட உங்களின் ஆதார் கார்டு நகல்களை அழித்து விடவும்.
-
ஆதார் டிஜிட்டல் நகல்களை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்.
-
உங்களுடைய தற்போதைய மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.
-
ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதன் மூலமாக நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
-
UIDAI வெப்சைட்டை அவ்வப்போது பார்வையிடுவதன் மூலமாக உங்கள் ஆதார் நம்பரின் பயன்பாட்டை கண்காணிக்கவும். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு மோசடிகளை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள்:
-
டெலிவரி அல்லது பிற வெரிஃபிகேஷன் காரணங்களுக்காக உங்களுடைய ஆதார் நம்பர் கேட்கும் நபர்களிடம் அதனை கொடுத்து விட வேண்டாம். தேவைப்பட்டால் முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கும் மாஸ்க்டு ஆதார் கார்டை வழங்கவும்.
-
அரசு ஏஜென்சிகள் அல்லது வங்கிகளில் இருந்து பேசுவதாக சொல்லி OTPகளை கேட்கக்கூடிய நபர்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு அதிகாரியும் இது போன்ற தகவலை உங்களிடம் இருந்து கேட்க மாட்டார்.
-
சோஷியல் மீடியா அல்லது பரிட்சயம் இல்லாத நபர்களுக்கு உங்களுடைய ஆதாரை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
-
UIDAI போர்ட்டலை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கம்ப்யூட்டரில் UIDAI வெப்சைட்டை லாகின் செய்யும் பொழுது கவனமாக இருக்கவும். ஏனெனில் பர்சனல் கம்ப்யூட்டர் தவிர பிற கம்ப்யூட்டர்களில் நீங்கள் உங்களுடைய லாகின் ID மற்றும் பாஸ்வேர்டை கொடுக்கும் பொழுது அது அந்த கம்ப்யூட்டரில் சேமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் உங்களுடைய தனிநபர் விவரங்களை திருடலாம்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இந்த குறிப்புகளை பின்பற்றி விழிப்புடன் இருப்பதன் மூலமாக ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட மோசடிகளை நீங்கள் தவிர்க்கலாம். சந்தேகத்தின் பெயரில் உங்களுக்கு வரக்கூடிய போன் கால்கள் மற்றும் SMS என எதையும் அலட்சியமாக கருதாமல், உடனடியாக அது குறித்து தகுந்த அதிகாரிகளிடம் புகார் அளிப்பதன் மூலமாக மோசடிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…