Last Updated:
UIDAI-ன் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலைப் (SSUP) பயன்படுத்தி உங்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் அப்டேட் செய்வது என்பது விரைவானது மற்றும் வசதியானது.
வங்கி, அரசுத் திட்டங்கள் மற்றும் நிதிச் சேவைகள் என அனைத்திலும் ஆதார் ஒரு முதன்மை அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, உங்கள் ஆதார் விவரங்களை அப்டேட்டாக வைத்திருக்காவிட்டால், சில முக்கிய பணிகளில் தாமதங்கள் மற்றும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
எனவே, ஆதாரில் சரியான தகவல், குறிப்பாக உங்கள் முகவரி சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அதை அப்டேட் செய்து வைத்திருப்பது KYC, பெனிஃபிட் கிளெய்ம்ஸ் அல்லது அக்கவுன்ட் வெரிஃபிகேஷன்களின்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
ஒருவேளை உங்கள் ஆதாரில் தவறான முகவரி இருந்தால் அது KYC சரிபார்ப்பு, வங்கிக் கணக்கு சேவைகள் மற்றும் அரசாங்க சலுகைகளைப் பெறுவதில் உங்களுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். இதனை கருத்தில்கொண்டு UIDAI-ஆனது உங்கள் ஆதார் முகவரியை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் அப்டேட் செய்ய ஏதுவாக எளிதான படிப்படியான விருப்பங்களை வழங்குகிறது.
எனினும், தற்போது முகவரி அப்டேட்களை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். அதே நேரம் பெயர், பிறந்த தேதி அல்லது மொபைல் நம்பர் போன்ற மாற்றங்களை ஆதார் மையங்கள் அல்லது தபால் நிலையங்களில்தான் செய்து முடிக்க வேண்டும்.
ஆதார் அப்டேட் செயல்முறையை விரைவாகவும், வசதியாகவும் செய்து முடிக்க UIDAI பல மேம்படுத்தல்களை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் PAN, பாஸ்போர்ட் மற்றும் ரேஷன் கார்டு பதிவுகள் போன்ற பிற அதிகாரப்பூர்வ தரவுத் தளங்களுடன் யூஸர்களின் விவரங்கள் தானாகவே சரிபார்க்கப்படும். இது ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கும். கூடுதலாக, மின்சார பில்கள் போன்ற யுட்டிலிட்டி பில்கள் இப்போது முகவரி மாற்றத்திற்கு செல்லுபடியாகும் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்.
QR குறியீட்டுடன் கூடிய ஆதாரின் பாதுகாப்பான டிஜிட்டல் வெர்ஷனை வழங்கும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் ஆப்-ல் UIDAI பணியாற்றி வருகிறது. இதன் அர்த்தம் இனி யூஸர்கள் கைகளில் ஆதார் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை; தேவைப்படும்போது, அவர்கள் ஆதாரின் பாதுகாப்பான, டிஜிட்டல் அல்லது மாஸ்க்ட் வெர்ஷனைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
UIDAI-ன் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலைப் (SSUP) பயன்படுத்தி உங்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் அப்டேட் செய்வது என்பது விரைவானது மற்றும் வசதியானது. இந்த முறையைப் பயன்படுத்த, OTP சரிபார்ப்புக்காக உங்கள் மொபைல் நம்பர், ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது அவசியம். பின்னர் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று SSUP-ஐ ஓபன் செய்யவும்.
- பின்னர் OTP மூலம் உள்நுழையும் விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் 12 இலக்க ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து, ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும். உள்நுழைய உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஆறு இலக்க குறியீட்டை என்டர் செய்யவும்.
- பின்னர் Update Address என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- உங்கள் துணை ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளபடி துல்லியமான முகவரியை கவனமாக, பிழையின்றி டைப் செய்யவும்.
- வாடகை ஒப்பந்தம், எல்பிஜி கனெக்ஷன் ஆவணம் அல்லது மொபைல் பில் போன்ற செல்லுபடியாகும் PoA-ன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அப்லோட் செய்யவும்.
- பிறகு விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் அப்டேட் ஸ்டேட்டஸை கண்காணிக்க அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (URN) உங்களுக்குக் கிடைக்கும்.
நீங்கள் அப்டேட் செய்த முகவரி பொதுவாக சில நாட்கள் முதல் சில வாரங்களுக்குள் செயலாக்கப்படும். அதன் பிறகு உங்கள் புதிய இ-ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
November 28, 2025 6:58 PM IST
ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் செய்யணுமா…? ஆன்லைன் செயல்முறைக்கு படிப்படியான வழிமுறைகள் இதோ…


