Last Updated:
உங்களுடைய ஆதார் எண்ணை குறித்த காலகட்டத்திற்குள் அப்டேட் செய்ய தவறிவிட்டால் பின்வரும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் இருக்கும் பல்வேறு PAN கார்டு வைத்து இருப்பவர்களை பாதிக்கும் வகையில் வருமான வரித்துறை ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் உங்களுடைய PAN கார்டை ஆதார் விண்ணப்பத்தின்போது நியமிக்கப்பட்ட ஆதார் என்ரோல்மென்ட் ID-ஐ பயன்படுத்தி பெற்றிருக்கும் பட்சத்தில், அதனை தற்போது நீங்கள் உங்களுடைய உண்மையான ஆதார் எண் கொண்டு PAN கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். மேலும், வருமான வரித்துறை தாக்கல் செய்தல் மற்றும் பொருளாதார சேவைகளில் எந்த ஒரு தடையும் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த அப்டேட்டை நீங்கள் டிசம்பர் 31, 2025-க்குள் நிறைவு செய்ய வேண்டும்.
அடையாள சரிபார்ப்பு மற்றும் வரி ஒழுங்கை எளிமைப்படுத்துவதற்கும் அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆதார் அட்டையுடன் PAN கார்டை இணைத்துவிட்டால் வரி ஏய்ப்பை தடுக்கலாம். மேலும், வரி செலுத்துவோரின் சரியான பதிவேடுகளை உறுதி செய்வதற்கு இது உதவும். டிஜிட்டல் அடையாள அமைப்புடன் இந்திய பொருளாதார மற்றும் வரி அமைப்புகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.
ஆதாரை சரியான நேரத்தில் அப்டேட் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகள்:
உங்களுடைய ஆதார் எண்ணை குறித்த காலகட்டத்திற்குள் அப்டேட் செய்ய தவறிவிட்டால் பின்வரும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
- உங்களுடைய PAN கார்டு டீ-ஆக்டிவேட் செய்யப்பட்டு பயனற்றதாக மாறிவிடும்.
- ஆதார் எண்ணுடன் லிங்க் செய்யப்பட்ட மற்றும் ஆக்டிவாக உள்ள PAN கார்டு இல்லாமல் உங்களால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
- தற்போதுள்ள உங்களுடைய பேங்க் அக்கவுண்டுகள் மற்றும் ஃபைனான்சியல் டிரான்சாக்ஷன்கள் செய்வதில் சிக்கல் ஏற்படும்.
இதையும் படிக்க: அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பென்ஷன் சட்டத்தில் புதிய மாற்றம்…!
உங்களுடைய ஆதார் எண்ணை PAN கார்டுடன் அப்டேட் செய்வது எப்படி?
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ e-ஃபைலிங் போர்டலுக்குச் செல்லவும்.
- அதில் உங்களுடைய பேன் விவரங்களைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
- ‘லிங்க் ஆதார்’ (Link Aadhaar) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை என்டர் செய்யுங்கள்.
- ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP பயன்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தவும்.
- கோரிக்கையை சமர்ப்பித்து, உறுதியளிப்பு மெசேஜுக்காக காத்திருக்கவும்.
இதையும் படிக்க: பேஸ் ஐடி, QR குறியீடு அம்சங்களுடன் புதிய ஆதார் ஆப் அறிமுகம்…! தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்…
ஆதார் எண்ணுடன் PAN கார்டை இணைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம்:
முன்னதாக PAN கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியாக ஜூன் 30, 2023 வழங்கப்பட்டது. இதை செய்ய தவறுபவர்கள் செயல்முறையை நிறைவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
April 11, 2025 1:54 PM IST
ஆதார் என்ரோல்மென்ட் ID யூஸ் பண்ணி PAN கார்டு லிங்க் பண்ணி இருக்கீங்களா…? அப்போ இத கட்டாயம் செஞ்சிடுங்க…!


