Last Updated:
ஆதார் அட்டையானது தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளுக்கு ஒரு முக்கியமான அடையாள மற்றும் முகவரி சான்றிதழாக செயல்படுகிறது.
ஆதார் அட்டை என்பது இந்திய குடியிருப்பாளர்களுக்கு மிகவும் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் இந்த 12 இலக்க தனித்துவ எண் ஒரு நபருடைய கை ரேகைகள், கருவிழி ரேகை மற்றும் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் விவரங்களுடன் அடிப்படை தனிநபர் விவரங்களையும் கொண்டுள்ளது.
ஆதார் அட்டையானது தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளுக்கு ஒரு முக்கியமான அடையாள மற்றும் முகவரி சான்றிதழாக செயல்படுகிறது. எனவே, உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள தனிநபர் விவரங்கள் மற்றும் பிற தரவுகள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம்.
ஆதார் எண்ணுக்கு மொபைல் நம்பர் மற்றும் இமெயில் சரிபார்ப்பு செய்வதன் முக்கியத்துவம்:
உங்களுடைய ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்ப்பதன்மூலம், முக்கியமான OTPகள், எச்சரிக்கைகள் மற்றும் அப்டேட்டுகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் உங்களால் பெற முடியும். உங்களுடைய ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதில் இருந்து இது உங்களை பாதுகாக்கும்.
அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் பொருளாதார சேவைகள் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையைக் கொண்டுள்ளன. ஒருவேளை உங்களுடைய மொபைல் நம்பர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலோ அல்லது சரிபார்க்கப்படாமலோ இருந்தால் ஆதார் சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்துவதில் நீங்கள் சிக்கல்களை அனுபவிப்பீர்கள்.
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை சரிபார்ப்பது எப்படி?
- முதலில் அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டுக்குச் செல்லுங்கள்.
- அங்கு ‘மை ஆதார்’ என்ற பிரிவிற்குச் செல்லவும்.
- இமெயில் / மொபைல் நம்பர்’ என்று ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை உள்ளிடவும்.
- நீங்கள் சரிபார்க்க விரும்பும் மொபைல் நம்பரை நிரப்புங்கள்.
- திரையில் தெரியும் கேப்சா குறியீட்டை பூர்த்தி செய்துவிட்டு ‘சென்ட் OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ என்டர் செய்யவும்.
- அடுத்து ‘வெரிஃபை OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இதனை நிறைவு செய்தவுடன் உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பது திரையில் காண்பிக்கப்படும்.
- மீண்டும் அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
- ‘மை ஆதார்’ என்ற பிரிவிற்குச் சென்று ‘வெரிஃபை இமெயில் / மொபைல் நம்பர்’ என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்யுங்கள்.
- அடுத்து நீங்கள் சரிபார்க்க விரும்பும் இமெயில் ஐடியை உள்ளிடவும்.
- திரையில் தெரியும் கேப்சா குறியீட்டை பூர்த்தி செய்துவிட்டு ‘சென்ட் OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- OTP பெறுவதற்கு உங்களுடைய இமெயில் இன்பாக்ஸை சரிபார்க்கவும்.
- அடுத்து ‘வெரிஃபை OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
- சரிபார்ப்பு செயல்முறை பூர்த்தி செய்யப்பட்டவுடன் திரையில் ஒரு மெசேஜைக் காண்பீர்கள்.
Jan 18, 2026 10:31 AM IST
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர், இமெயில் முகவரியை சரிபார்க்கணுமா…? படிப்படியான வழிமுறைகள் இதோ…


