Last Updated:
ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பிகாரைச் சேர்ந்த பலர் வெளிமாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடர்பான விவகாரத்தில் 88 பக்க பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குவதன் மூலம் அவருக்கு இந்தியக் குடியுரிமையே கிடையாது என்ற முடிவுக்கும் வர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
July 22, 2025 9:27 PM IST
ஆதார் அட்டையை இந்தியக் குடியுரிமையாக கருத முடியாது… – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்


