மத்திய மற்றும் மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிதி நிறுவனங்களாக இருந்தாலும் சரி இது சம்பந்தப்பட்ட எந்த சேவைகளையும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசியமான ஆவணமாக தற்போது ஆதார் அட்டை திகழ்கிறது. இந்திய குடிமக்களுக்கு இது தற்போது ஒரு முக்கியமான அடையாள அட்டையாகவும் விளங்குகிறது. அதனால் ஆதார் அட்டையில் இருக்கக்கூடிய விவரங்கள் சரியாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, மற்றும் பிற அத்தியாவசிய விபரங்கள் அப்டேட் ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான மாற்றங்களை ஆதார் அட்டையில் செய்வதால் உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஆகலாம் என்று யூனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா வகுத்துள்ள வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை நீங்கள் எத்தனை முறை மாற்றலாம் அல்லது அப்டேட் செய்யலாம் என்பதற்கு ஒரு சில குறிப்பிட்ட வரம்புகள் உள்ளது.
UIDAI வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி, ஆதார் அட்டை சம்பந்தப்பட்டுள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ளலாம்.
DOB:
ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய பிறந்த தேதியை நீங்கள் ஒருமுறை மட்டுமே மாற்ற இயலும். மேலும் ஆதார் அட்டை வாங்கும் பொழுது அசலாக பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியிலிருந்து அதிகபட்சமாக 3 வருடங்கள் முன்னரோ பின்னரோ அனுமதிக்கப்படலாம்.
முகவரி:
ஆதார் அட்டையில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றுவதற்கு உங்களுக்கு எந்த விதமான லிமிட்டும் கிடையாது; எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உங்கள் முகவரியை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.
பெயர்:
ஆதார் அட்டை வைத்திருப்பவர் தன்னுடைய பெயரை அதிகபட்சமாக 2 முறை மட்டுமே மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்.
பாலினம்:
விதிமுறைகளின் படி, ஒருவர் பாலின விவரங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.
புகைப்படம்:
யூசர்கள் தங்களுடைய புகைப்படத்தை எந்த ஒரு லிமிட்டும் இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அப்டேட் செய்யலாம்.
கொடுக்கப்பட்டுள்ள லிமிட்டை மீறி விட்டால் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான முறை உங்களுடைய பெயர், பாலினம் அல்லது பிறந்த தேதியை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டுமெனில் நீங்கள் எக்செப்ஷன் ஹேண்டிலிங் ப்ரோசீஜர் (exception handling procedure) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு செயல்முறையை பின்பற்ற வேண்டும். இதற்கு நீங்கள் UIDAI பிராந்திய அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
ஒரு நினைவூட்டலாக தங்களது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஒருவர் அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதற்கான கடைசி தேதி மார்ச் 14, 2024 வரை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு குடிமக்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடைசி தேதிக்கு பிறகு நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு மாற்றங்களுக்கும் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) உங்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்யும். விவரங்களை அப்டேட் செய்வதற்கு ஒருவர் ஆதார் வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…