குடிமகன் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஒற்றைச் சான்றிதழ் இருக்கிறதா? உண்மையில், இந்த நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க எந்தவித ஒற்றை சான்றிதழும் இல்லை. ஏனெனில், குடிமகன் என்பது அடிப்படையில் சட்டப்பூர்வமான தகுதியாகும். இந்திய சட்டங்களின் படி, ஜனவரி 26, 1950 மற்றும் அதற்குப் பிறகு இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் குடிமகன் ஆவார். இருப்பினும், ஜூலை 1, 1987-க்குப் பிறகு பிறந்திருந்தால், அவரின் பெற்றோரில் ஒருவர் இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்து இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 2003 சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, பெற்றோர் இருவருமே இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; அல்லது ஒருவர் இந்தியராகவும், மற்றவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக (illegal migrant) இல்லாமலும் இருக்க வேண்டும்.


