• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா | waqf bill clears in lok sabha 288 in favour 232 opposed was explained

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா | waqf bill clears in lok sabha 288 in favour 232 opposed was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.

திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அங்கம் வகித்த தங்களது பரிந்துரைகள் கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதன் மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் கிரண் ரிஜிஜு: வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். எனினும், அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன். அதன் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill). அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. அதேநேரம், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா வகை செய்கிறது.

இது முற்றிலும் சொத்துகளை கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது பற்றிய விஷயம் ஆகும். குறிப்பாக, இப்போது உள்ள சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும். இந்த கடுமையான பிரிவு நீக்கப்படுகிறது. அதேநேரம் மசூதி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

முஸ்லிம்கள் நிலம் பறிக்கப்படாது இந்த புதிய மசோதா முஸ்லிம்களின் நிலத்தை பறிக்க வகை செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த நிலமும் பறிக்கப்படாது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் உட்பட பல சொத்துகள் தொடர்பாக 1970 முதல் ஒரு வழக்கு நடந்து வருகிறது. இந்த சொத்துகளுக்கு டெல்லி வக்பு வாரியம் உரிமை கோருகிறது.மோடி அரசு ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், பல சொத்துகள் வக்பு வாரியத்தின் வசமாகி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் தாக்கு: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசும்போது, “அரசியல் சாசனத்தை நீர்த்து போகச் செய்வதும், சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறித்து அவர்களை இழிவுபடுத்துவதும், இந்திய சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம். நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்றார்.

“மக்களவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாத கட்சிக்கு இன்று முஸ்லிம்கள் நினைவில் வந்திருக்கின்றனர். வக்பு சொத்துகளில் சுமார் 27 சதவீதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. அங்கு அடுத்த 18 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வரலாற்று சிறப்பு மிக்க மசூதியை இடித்து அயோத்தியை உருவாக்கினீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்திருந்தால், அயோத்தி குழுவில் ஒரு முஸ்லிம் உறுப்பினரைச் சேர்த்து இருப்பீர்கள்” என்று ஷிரோமணி அகாலி தள எம்.பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் சட்டத்தை கிழித்து எறிந்தது போல், இந்த சட்ட திருத்தத்தை தான் கிழித்து எறிவதாக அசாதுதீன் ஒவைசி தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்தார்.

வக்பு மசோதா மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர். நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அமித் ஷா விளக்கம்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்ப்பதால் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் வாதங்களை பார்க்க முடிந்தது. இந்த சட்ட திருத்தம் அதற்காக கொண்டு வரப்படவில்லை. சிறுபான்மையினரிடையே தங்களது வாக்கு வங்கிக்காக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தவறான கருத்து பரப்பப்படுகிறது.

முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்கள் மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். வக்பு வாரியத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடை நிதி சார்ந்த விஷயத்தில் நிர்வாக ரீதியாக அவர்கள் பணிபுரிவார்கள். அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா, ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் தேவைக்காக நிதி செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் கவனிப்பார்கள். அனைத்துக்கும் கணக்கு இருக்கும். வெளிப்படைத்தன்மைக்காக ஓய்வுபெற்ற சிஏஜி அதிகாரிகள் கணக்கு விவகாரங்களை கவனிப்பார்கள் என அமித் ஷா சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்.

மசோதாவின் திருத்தங்கள் என்ன? – மத்திய வக்பு கவுன்சிலில் உள்ள 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும். மாநில வக்பு கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும். 2013-க்கு முன்பு இருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.

வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.

வக்பு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்பு சொத்து விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.



Read More

Previous Post

‘துறவற’ தில் துறத்த தீர்மானம்

Next Post

ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? – பெங்களூருவில் இன்று மோதல் | rcb to play with gujarat titans in bengaluru today ipl 2025 match preview

Next Post
ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? – பெங்களூருவில் இன்று மோதல் | rcb to play with gujarat titans in bengaluru today ipl 2025 match preview

ஆர்சிபி அணியின் தொடர் வெற்றியைத் தடுக்குமா குஜராத்? - பெங்களூருவில் இன்று மோதல் | rcb to play with gujarat titans in bengaluru today ipl 2025 match preview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin