Last Updated:
இந்த வருமானச் சான்றிதழை சவுரப் திரிவேதி என்ற தாசில்தார் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார். இந்தச் சான்றிதழின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகப் பரவி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 3 ரூபாய் ஆண்டு வருமானம் என தாசில்தார் வருமானச் சான்றிதழ் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்கமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சாத்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு உள்ளூர் விவசாயிக்கு 3 ரூபாய் ஆண்டு வருமானமாகக் காட்டி வருமானச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஆவணத்தில் தாசில்தாரின் அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் அவருடைய கையெழுத்து ஆகியவை உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்த நிலையில், சான்றிதழ் வைரலான பிறகு அதிகாரிகள் உடனடியாக அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இது ஒரு எழுத்துப்பிழை என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும், வருமானத்தை அதிகப்படுத்தி புதிய வருமானச் சான்றிதழை வழங்கி உள்ளனர்.
ராம்ஸ்வரூப் என்ற 45 வயது விவசாயி, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாத்னா மாவட்டத்தின் நயாகான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தாசில்தார் கையெழுத்திட்டு வழங்கிய வருமானச் சான்றிதழில் ஒவ்வொரு மாதமும் 25 பைசா என்ற வருமானத்தின் அடிப்படையில் ஆண்டு வருமானமாக 3 ரூபாய் எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வருமானச் சான்றிதழை சவுரப் திரிவேதி என்ற தாசில்தார் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார். இந்தச் சான்றிதழின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகப் பரவி வருகிறது.
आवेदक की स्व-घोषणा के अनुसार आय प्रमाण जारी करने में लिपिकीय त्रुटि हुई थी। जिसे तत्काल सुधार कर (निरस्त कर) नया आय प्रमाण पत्र जारी कर दिया गया है।#JansamparkMP @CMMadhyaPradesh #सतना pic.twitter.com/Q2q9TJiFsQ
— Collector Satna (@Collector_Satna) July 27, 2025
“அது ஒரு எழுத்துப் பிழை, இப்பொழுது அதனை சரி செய்து விட்டோம். புதிய வருமானச் சான்றிதழ் வழங்கி விட்டோம்”, என்று சவுரப் திரிவேதி நடந்த தவறைத் தெளிவுபடுத்தினார். அதே சமயத்தில் மத்திய பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைப்பினர் இப்படி ஒரு அஜாக்கிரதையான தவறை இழைத்த அரசைச் சாடி வருகின்றனர். முதலில் வழங்கப்பட்ட தவறான வருமானம் கொண்ட சான்றிதழின் புகைப்படங்களை ஷேர் செய்து மக்களை ஏழ்மையாக்குவதே அரசின் பணியாக உள்ளது என்று கேலியாகப் பதிவு செய்திருக்கின்றனர்.
July 31, 2025 10:23 AM IST