தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ஆயுஷ்மான் கார்டு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மற்றும் ஆவணமில்லா சிகிச்சையை எளிதாக பெற உதவுகிறது. இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது.
2025-ல் இந்த திட்டத்தில் சேர யார் தகுதியுடையவர்கள்?
முறைசாரா அல்லது குறைந்த வருமானம் கொண்ட வேலைகளில் பணிபுரியும் நபர்கள், எடுத்துக்காட்டாக:
- வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், பிச்சைக்காரர்கள்
- கட்டுமானத் தொழிலாளர்கள், பிளம்பர்கள், ஓவியர்கள்
- ஓட்டுநர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், டெலிவரி உதவியாளர்கள்
- மின்சார வல்லுநர்கள், மெக்கானிக்குகள், பாதுகாப்பு காவலர்கள்
தகுதியான கிராமப்புற குடும்பங்கள்:
- ஒரு அறையைக் கொண்ட குச்சி வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள்
- 16-59 வயதிற்குள்ளான வேலைக்குச் செல்லக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஆண்கள் இல்லாத குடும்பங்கள்
- எஸ்சி/எஸ்டி மற்றும் ஊனமுற்றோர் உள்ள குடும்பங்கள்
- உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் நிலமற்ற குடும்பங்கள்
மூத்த குடிமக்கள்:
- 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் (நகரம் மற்றும் கிராமம் என இரண்டிலுமே)
- பிற அரசாங்க சுகாதாரத் திட்டங்களில் உள்ளவர்கள் மாற்றுக் கருத்துடன் விண்ணப்பிக்கலாம்.
- தனியார் மருத்துவ காப்பீட்டாளர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
1. அதிகாரப்பூர்வ இணையதளமான pmjay.gov.in செல்லவும்.
2. மேலே உள்ள மெனுவில் ‘நான் தகுதியானவனா?’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து ஓடிபி மூலம் சரிபார்க்கவும்.
3. மாநிலம் மற்றும் திட்டத்தை (PMJAY) தேர்வு செய்து உங்களது தகுதியை அறிந்துகொள்ள தேவையான விவரங்களை வழங்க வேண்டும்.
4. உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க ‘e-KYC செய்யுங்கள்’ என்பதைக் கிளிக் செய்து ‘ஆதார் OTP’ என்பதைத் தேர்வு செய்யவும்.
5. 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் PMJAY வலைதளத்தில் மீண்டும் உள்நுழையவும்.
6. பின் ‘Download Card’ என்பதை கிளிக் செய்து உங்கள் ஆயுஷ்மான் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
7. இந்த கார்டை பதிவிறக்கம் செய்தவுடன், உங்கள் கார்டு PMJAY திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற உங்களை அனுமதிக்கும்.
இவ்வாறாக, தகுதி உள்ளவர்கள் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற உதவும் வகையில் இந்தத் திட்டம், இந்திய சுகாதார அமைப்பின் முக்கியத் தூணாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்களுக்கு https://pmjay.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
June 27, 2025 6:38 PM IST
ஆண்டுக்கு ரூ.5 லட்சம்… ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர தகுதி என்ன…? விண்ணப்பிப்பது எப்படி…?

