இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இரவில் நிகழும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்கமுடியுமா?
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டின் முதல் சூரியகிரகணம் நாளை நிகழவுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் பார்க்க முடியாது.
அதேநேரத்தில் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள் பார்க்கலாம். இந்த நிலையில் சூரிய கிரகணம் குறித்து அமெரிக்க மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சூரியகிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், வளைய மற்றும் முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன.
இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே நாளை நிகழ உள்ளது. இதை நாசா தனது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
