
Last Updated:
பஞ்சாப் மாநிலத்தில் தனது பைக்கில் லிப்ட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கடந்த 18 மாதங்களில் 11 ஆண்களை படுகொலை செய்த சீரியல் கில்லர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்
பொதுவாக சாலைகளில் இருசக்கரவாகனங்களில் செல்வோரிடம் லிப்ட் கேட்டால் பலரும் மறுத்து விடுவார்கள். ஆனால் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ராம் சரூப் என்ற இவர் மட்டும், வாண்ட்டடாக சென்று லிப்ட் வேண்டுமா? என்று கேட்டு வாகனத்தில் ஏற்றிக் கொள்வார். இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா என வியந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அந்த நபரை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் செல்வார் ராம் சரூப்.
அங்கு அசந்த நேரத்தில் பின்னந் தலையில் நங்கென இரும்புத்தடியால் தாக்கி கொலை செய்வது தான் இவரது ஸ்டைல். தலையில் அடிபட்டும் சாகவில்லை என்றால் துனியால் கழுத்தை நெரித்து பரலோகத்திற்கு அனுப்பி வைப்பார். சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின் அவர்களிடமிருக்கும் வாட்ச், செயின், பர்ஸ் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தடயமே இல்லாமல் தப்பி செல்வது இவருக்கு கைவந்த கலை..
அண்மையில் மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ விற்று வந்த 37 வயது நபரை கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் தான், ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து ராம் சரூப்பை போலீசார் கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது தான், சுமார் 10பேரை கொன்றிருப்பதாக குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராம் சரூப்.
இவற்றில் 5 கொலை சம்பவங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக? விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
December 26, 2024 4:03 PM IST

