Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவரது மனைவியின் ஒரு வருட துன்புறுத்தலே காரணம் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி காலை ஆக்ராவில் உள்ள அவரது வீட்டில் மானவ் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன், சர்மா கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் நீடிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், தனது முடிவுக்கு மனைவியே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், ஆண்களைப் பற்றி பேசுங்கள் என்றும், அவர்களை பற்றியும் சிந்தியுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். மேலும், இந்தச் செய்தி காவல்துறை மற்றும் சட்ட அமைப்பிற்காக ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை, நிலைமை இப்படியே சென்றால், ஆண்களுக்கு எதிர்காலம் இருக்காது மற்றும் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Also Read: பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பாறை வெடித்து விபத்து… 57 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
இதற்கிடையே, மானவ் சர்மாவின் மனைவி நிகிதா சர்மா கூறியிருப்பதாவது, தனது கடந்த காலத்தை நியாயமற்ற முறையில் தனக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்பு, மானவை தற்கொலையிலிருந்து மூன்று முறை காப்பாற்றியதாகவும் மனைவி நிகிதா கூறியுள்ளார். டிசிஎஸ் ஊழியர் மானவ் சர்மாவின் தற்கொலை தொடர்பாக ஆக்ரா போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
February 28, 2025 5:29 PM IST


