வெறும் உபேரில் சவாரி செய்து அதற்கு கோடிக்கணக்கில் பில் வந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? கடந்த மார்ச் 29ஆம் தேதி காலையில் வழக்கமாக தான் பயணம் செய்யும் உபேர் ஆட்டோவில் பயணம் செய்து ரூ. 7.66 கோடி பில் பெற்றுள்ளார் Uber வாடிக்கையாளர் ஒருவர்.
ஆம்! நீங்கள் படித்தது சரிதான். தீபக் தெங்குரியா என்ற நபர் ஒரு வழக்கமான Uber வாடிக்கையாளர் ஆவார். சம்பவத்தன்று காலை Uber India ஆப்பை பயன்படுத்தி வெறும் 62 ரூபாய்க்கு ஆட்டோ சவாரிக்கு முன்பதிவு செய்துள்ளார். அதன் பிறகு தீபக் தனது இருப்பிடத்தை அடைந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. டிரைவரிடம் ரூ. 7.66 கோடி கொடுக்கும்படி பில் பெற்றுள்ளார் தீபக்.
இந்த எதிர்பாராத சம்பவத்தை தீபக் எதிர்கொண்ட பிறகு, அவரது நண்பர் ஆஷிஷ் மிஸ்ரா இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் உபேரில் ஆட்டோ சவாரிக்கு முன்பதிவு செய்து பயணித்த பிறகு தீபக் பெற்ற பெரும் பில் பற்றி இருவரும் விவாதிப்பதைக் கேட்கலாம்.
X தளத்தில் பகிரப்பட்ட வீடியோவின் படி, தீபக் தான் உபேர் பில்லில் பெற்ற சரியான தொகையை குறிப்பிட்டுள்ளார். அவரது நண்பர் ஆஷிஷ் அவரிடம் ‘உங்கள் பில் மதிப்பு எவ்வளவு, காட்டுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘ரூ. 7,66,83,762’ என்று தீபக் பதிலளித்தபடி தனது மொபைலை காட்டுகிறார்.
தீபக் தனது போனை கேமராவில் காட்டிய உடன், ‘பயணக் கட்டணமாக’ ரூ. 1,67,74,647, காத்திருப்பு கட்டணமாக ரூ. 5,99,09189 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புரொமோஷன் செலவாக ரூ. 75 கழிக்கப்பட்டதாகவும் அதில் காட்டப்பட்டிருந்தது.
Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?
இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, Uber India வாடிக்கையாளர் சப்போர்ட்டின் அதிகாரப்பூர்வ X பக்கம் இச்சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, இந்த விஷயத்தை தாங்கள் கவனித்து வருவதாகக் கூறியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…