• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆட்டோ ஓட்டுநர் மகள் டூ உலக சாம்பியன்; கேரம் காசிமாவின் அடுத்த இலக்கு இதுதான்

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆட்டோ ஓட்டுநர் மகள் டூ உலக சாம்பியன்; கேரம் காசிமாவின் அடுத்த இலக்கு இதுதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் இரு வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்து உலக அளவில் தமிழர்களை கவனிக்க செய்துள்ளனர். ஒருவர் பெரிதும் அறியப்பட்டுள்ள செஸ் சாம்பியன் குகேஷ். மற்றொருவர் அதிகம் அறியப்படாத கேரம் சாம்பியன் காசிமா.

இந்த மாதம் நடந்து முடிந்த செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அதில் உலக சாம்பியன் பட்டத்தை 18 வயதில் வென்றார். இவருக்கு முன்பாக கடந்த நவம்பர் மாதமே நடந்து முடிந்த கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று கேரம் சாம்பியனானார் 17 வயது காசிமா.

விளம்பரம்

குகேஷ்க்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டும், வெளிச்சமும் காசிமாவுக்கு பெரிய அளவில் கிடைக்காமல் போனது. தனிநபர் அளவில் இதுவெல்லாம் மறுக்கப்படாமல், விளையாட்டு அடிப்படையில் இது எல்லாம் மாறியுள்ளதோ எனும் கேள்வி எழுகிறது.

இதற்கெல்லாம் விடை பெறவும், காசிமாவை கொண்டாடும் விதமாகவும், நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் கேரம் காசிமாவுடனும் அவரின் பயிற்சியாளரும், இந்தியாவில் கேரமிற்காக அர்ஜுனா விருதை பெற்ற முதல் வீரருமான மரியா இருதயத்துடனும் கலந்துரையாடினார்.

காசிமா

காசிமா யார்?

காசிமா: “என் அப்பா ஆட்டோ ஓட்டுநர். அதேசமயம், கேரம் கிளப்பும் நடத்திவருகிறார். சிறுவயது முதலே கேரம் மீது அதிக காதல். நான் 2ம் வகுப்பு படிக்கும் போதே விளையாடத் துவங்கிவிட்டேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்”

விளம்பரம்

சென்னை, இந்தியாவில் கேரம் எப்படி இருக்கிறது?

மரியா இருதயம்: “1991ல் முதல் முறை உலக சாம்பியன்ஷிப் வென்றேன். அப்போது பெரும் வரவேற்பு கிடையாது. டெல்லியில் இருந்து சென்னை வந்து என் வேலை பார்க்கத் துவங்கிவிட்டேன். 1995ல் இரண்டாவது முறை உலக சாம்பியன்ஷிப் வென்றபோது தமிழ்நாடு கேரம் அசோஷியேஷன் வந்து வரவேற்றனர். இந்த முறை சென்னை வந்தபோது மாநில அரசே செலவு செய்து அனுப்பிவைத்து, வெற்றி பெற்று திரும்பிய போது விழா எடுத்து வரவேற்றது”

விளம்பரம்

ஆட்டோ ஓட்டுநரின் மகள் இன்று உலக சாம்பியன்ஷிப் வென்றவர், எப்படி உணர்கிறீர்கள்? அப்பா எப்படி உணர்கிறார்?

காசிமா: “அப்பா முதலில் அண்ணனை கேரமில் உலக சாம்பியன்ஷிப் வெல்ல வைக்க வேண்டும் என்று இருந்தார். ஆனால், அண்ணனால் ஒரு கட்டத்திற்கு மேல் விளையாட முடியாமல் போனது. நான் முதலில் விளையாட வேண்டும் என்றபோது ஏதோ ஆசைக்குச் சொல்கிறேன் என்று நினைத்தார். எனவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்”

மரியா இருதயம்

உதாரணத்திற்கு செஸ் போன்ற விளையாட்டுடன் ஒப்பிடும்போது கேரமிற்கு பெரிய கொண்டாட்டமோ, மதிப்போ ஒரு காலகட்டம் வரை இல்லாத அளவிற்கு இருந்தது என பார்க்க வேண்டியது இருக்கிறதா?

விளம்பரம்

மரியா இருதயம்: “இப்பவும் இருக்கிறது. முதல் காரணம் கேரம் பள்ளியில் விளையாட்டாக இல்லை. தற்போது கொண்டுவரப்பட்டு இருந்தாலும், பள்ளியில் இருந்து கல்லூரிகளுக்கு போகும்போது, பல்கலைக்கழக விளையாட்டுகளில் கேரம் இல்லை. எனவே அதனைத் தொடர முடியாமல் இருக்கிறது. நிறைய கேரம் வீரர்கள் அப்படித்தான் விளையாட்டை விட்டு தள்ளிச் சென்றுவிட்டனர்”

கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு உடல் ஆற்றல் தேவைப்படுகிறது. கேரமிற்கு அப்படி ஏதும் இருக்கிறதா?

மரியா இருதயம்: “உதாரணத்திற்கு கூடைப்பந்து இரண்டு மணி நேரம் விளையாட வேண்டும். கேரம் ஒரு நாளைக்கு நான்கு விளையாட்டை ஆட வேண்டும். ஒரு முறை விளையாட மூன்று மணி நேரம் வரைக்கூட ஆகும். எனவே நான்கு முறை என்றால் அதற்காக உட்காரும் அளவிற்கு உடலில் ஆற்றல் வேண்டும்”

விளம்பரம்

செஸ் மன விளையாட்டு என்கிறோம்; கேரமை அப்படி சொல்ல முடியுமா?

மரியா இருதயம்: “கிரிக்கெட் விளையாடும் போது பேட்ஸ்மேனுக்கு எதிராக யாராவது நடந்தாலும் கூட உடனே உட்கார வைக்க சொல்வார்கள். அதுபோல் தான், கேரம் விளையாடும்போது அருகே ஏதேனும் அசைவு ஏற்பட்டாலும்கூட கவனம் சிதறும். இந்த விளையாட்டில் கவனம் மிகவும் முக்கியம்”

காசிமாவின் அடுத்த இலக்கு என்ன?

காசிமா: “12 முறை தேசிய சாம்பியன், 3 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற ரேஷ்மி அவர்களை வீழ்த்த வேண்டும்.”

விளம்பரம்

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி எடுப்பீர்கள்?

காசிமா: “பள்ளிக்கு செல்லும்போதே காலை 4 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 அல்லது 9 மணி வரை பயிற்சி எடுப்பேன்.”

காசிமாவுக்கு வேறு ஏதும் பொழுதுபோக்கு கிடையாதா?

காசிமா: “சாதிக்க வேண்டும், அது மட்டும் தான். சாதித்து அம்மா, அப்பாவை நல்ல பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பாவுக்கு தற்போது உடல் ஒத்துழைக்காததால் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டார். அம்மா, சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளப்பிற்கு வருவார். சாப்பிடும் வரை அங்கே அமர்ந்திருப்பார். சாதிக்க வேண்டும்.”

இன்னும் கேரம் வீரர்களை உருவாக்க அரசு என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும்?

மரியா இருதயம்: “கவுன்சிலர் ஒரு இடம் கொடுத்து, எட்டு போர்டுகளை வாங்கி கொடுத்துள்ளார். அதில் பயிற்சி பெற்ற 9 பேர் வரை வேலை பெற்றுள்ளனர். ஆனால், நான் இதுவரை பயிற்சி கொடுப்பதற்காக யாரிடமும் கட்டணம் வாங்கியதே கிடையாது.”

.

Read More

Previous Post

நகர்ப்புறத்தில் 9.38 லட்சம் மக்களுக்கு வீடு இல்லை: மத்திய அரசு

Next Post

old man is selling Biryani for 10 rupees and Parotta for 5 rupees near Aruppukottai ags mkn – News18 தமிழ்

Next Post
old man is selling Biryani for 10 rupees and Parotta for 5 rupees near Aruppukottai ags mkn – News18 தமிழ்

old man is selling Biryani for 10 rupees and Parotta for 5 rupees near Aruppukottai ags mkn – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin