• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆட்டம் காண வைத்த “சிக்னல்” குழு.. அமெரிக்காவில் மிக முக்கிய அட்டாக் திட்டம்.. முன்கூட்டியே கசிந்தது எப்படி?

GenevaTimes by GenevaTimes
March 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஆட்டம் காண வைத்த “சிக்னல்” குழு.. அமெரிக்காவில் மிக முக்கிய அட்டாக் திட்டம்.. முன்கூட்டியே கசிந்தது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 26, 2025 2:15 PM IST

அமெரிக்காவில் ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் முன்கூட்டியே கசிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜனநாயக கட்சியினர் விசாரணை கோரியுள்ளனர்.

USAUSA
USA

அமெரிக்காவில் மிக முக்கிய தாக்குதல் திட்டம் முன்கூட்டியே ஊடகத்திற்கு கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள சிக்னல் செயலியில், உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குநர் ஜான் ரட்ச்லிப்பே, உளவுத்துறை இயக்குநர் துளசி கேபார்டு உள்ளிட்ட வெகு சிலர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவில் இணைய, அட்லாண்டிக் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்-கிற்கு, வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்-சிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கோல்ட்பெர்க் குழுவில் இணைந்துள்ளார்.

அக்குழுவில், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல் பகிரப்பட்டுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா கடந்த 15 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான தகவல் தனக்கு 2 மணி நேரங்களுக்கு முன்பே தெரியும் என பரபரப்பை கிளப்பியுள்ளார் கோல்ட்பெர்க்.

மேலும் தாக்குதல் நடத்திய பிறகு மைக் வால்ட்ஸ், “Amazing job” என்றும் அமெரிக்க கொடி இமோஜிகளையும் பகிர்ந்துள்ளார். அதி முக்கிய குழுவில், அமெரிக்க அரசுக்கு தொடர்பே இல்லாத ஒருவரை இணைத்தது எப்படி என மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Also Read | “தூங்கி எழுந்த சில நிமிடங்களில்…” மனோஜ் பாரதிராஜாவுக்கு என்ன பாதிப்பு? – இயக்குநர் பேரரசு பகிர்ந்த தகவல்!

அமெரிக்காவின் பாதுகாப்பையே டிரம்ப் நிர்வாகம் கேள்விக்குறியாக்குவதாக ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோல்ட்பெர்க்-கை குழுவில் இணைத்த மைக் வால்ட்ஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர். அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் ஐரோப்பிய நாடுகள் குறித்து சிக்னலில் பேசிய ஸ்கிரீன் ஷாட் ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க்கின் பங்கை, விமர்சித்து ஜே.டி. வான்ஸ் பேசியதாக கூறப்படும் ஆடியோவும் வெளியானது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 26, 2025 2:13 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஆட்டம் காண வைத்த “சிக்னல்” குழு.. அமெரிக்காவில் மிக முக்கிய அட்டாக் திட்டம்.. முன்கூட்டியே கசிந்தது எப்படி?

Read More

Previous Post

"3900 பருத்தி மூட்டைகள்" – ரூ.92 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது…

Next Post

ராயாவிற்காக அனைத்து மலேசிய தொலைத்தொடர்பு பயனர்களுக்கும் இலவச 5GB ஒதுக்கீடு – Malaysiakini

Next Post
ராயாவிற்காக அனைத்து மலேசிய தொலைத்தொடர்பு பயனர்களுக்கும் இலவச 5GB ஒதுக்கீடு – Malaysiakini

ராயாவிற்காக அனைத்து மலேசிய தொலைத்தொடர்பு பயனர்களுக்கும் இலவச 5GB ஒதுக்கீடு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin