இரண்டாவது இன்னின்ஸிலும் ஷுப்மன் கில்லின் மேஜிக் தொடர்ந்த நிலையில், 427 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது. இதனால், 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, 271 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.