• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கு இனி ஈஸியா கடன் வாங்கலாம்.. கூட்டுறவுத்துறையின் அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கு இனி ஈஸியா கடன் வாங்கலாம்.. கூட்டுறவுத்துறையின் அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 6:20 PM IST

கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூட்டுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டுறவுத்துறை வங்கி கடன்
கூட்டுறவுத்துறை வங்கி கடன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்ட காலக் கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் மதிப்பை உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி கடன் தொகை கிராமுக்கு 10 ஆயிரம் வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவு, புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்ட காலக் கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்தும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பிலான நீண்ட காலக் கடன்களும் (Long Term Loans) இச்சிறப்பு முகாம்களில் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இதில் வேளாண் இயந்திர மயமாக்கல், குளிர் பதங்கிடங்குகள் அமைத்தல், கால்நடை வளர்ப்பு (கறவை மாடு, ஆடு, கோழி), மற்றும் அறுவடைக்கு பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான கடன்கள் வழங்கப்படும்.

தகுதியுடைய உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்ட காலக் கடன் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் (PCARDB) உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயனடையலாம்.

விண்ணப்பத்துடன் புகைப்படங்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, KYC ஆவணங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களைச் சமர்ப்பித்திட வேண்டும்.

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திப் பொருளாதார மேம்பாடு அடையக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More

Previous Post

புலியை துரத்தி துரத்தி சாய்த்த டிரம்ப்? 3 வீடியோக்களையும் பார்த்து கொதித்த மக்கள்.. என்ன நடந்தது | Trump Tiger Video.. Did Trump Really Fight a Tiger? 3 Viral Clips Spark Outrage After UK Man Dies

Next Post

 புகைமூட்ட நெருக்கடி – அரசாங்கம் என்னதான் செய்கிறது? – Malaysiakini

Next Post

 புகைமூட்ட நெருக்கடி – அரசாங்கம் என்னதான் செய்கிறது? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin