• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை | 17 held captive in mumbai One killed in encounter

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை | 17 held captive in mumbai One killed in encounter
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த

இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார்.

இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க ரோகித் ஆர்யா அழைப்பு விடுத்​தார். இதன்​படி நேற்று காலை 17 சிறு​வர், சிறுமியர் மும்பை பொவாய் பகு​தி​யில் உள்ள ஆர்​.ஏ. ஸ்டூடியோவுக்கு சென்​றனர்.

அவர்​களை ஓர் அறை​யில் அடைத்த ரோகித் ஆர்யா வெளிப்​புற​மாக கதவை பூட்​டி​னார். அவர்​களுக்கு குடிநீர், உணவு​கூட வழங்​க​வில்​லை. அச்​சமடைந்த சிறு​வர், சிறுமியர் ஜன்​னல் கதவு​கள் வழி​யாக சாலை​யில் சென்​றவர்​களிடம் உதவி கோரினர்.

இதனிடையே ரோகித் ஆர்யா சமூக வலை​தளத்​தில் ஒரு வீடியோவை வெளி​யிட்​டார். அதில் அவர் கூறிய​தாவது: சிறு​வர், சிறுமிகளை பிணைக்​கை​தி​களாக அடைத்து வைத்​திருக்​கிறேன். நான் பெரி​தாக எந்த நிபந்​தனை​யும் விதிக்க மாட்​டேன். சில சிறிய நிபந்​தனை​களை மட்​டும் விதிப்​பேன். சில மனிதர்​களிடம் சில கேள்வி​களை எழுப்​புவேன். அதற்கு பதில் கிடைக்க வேண்​டும்.

நான் தீவிர​வாதி கிடை​யாது. பணம் கேட்​டும் மிரட்​டல் விடுக்க மாட்​டேன். தற்​கொலை செய்து கொள்ள விரும்​ப​வில்​லை. அதற்கு பதிலாக வேறு திட்​டத்தை செயல்​படுத்த முடிவு செய்​தேன். அதற்​காக சிறு​வர், சிறுமிகளை பிடித்து வைத்​திருக்​கிறேன். என்னை தாக்க முயன்​றால் ஸ்டூடியோவை தீ வைத்து எரித்து விடு​வேன். இவ்​வாறு ரோகித் ஆர்யா வீடியோ​வில் மிரட்​டல் விடுத்​தார்.

உடனடி​யாக சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்ற போலீ​ஸார், ரோகித் ஆர்​யா​வுடன் சுமார் 3 மணி நேரம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனால் சிறு​வர், சிறுமிகளை விடுவிக்க மறுத்​து​விட்ட அவர், தன்​னிடம் துப்​பாக்​கி, ரசாயனங்​கள் இருப்​ப​தாக மிரட்​டல் விடுத்​தார்.

வேறு வழி​யின்றி ஸ்டூடியோ​வின் கழி​வறை கண்​ணாடியை உடைத்து 5 போலீ​ஸார் உள்ளே நுழைந்​தனர். அவர்​களை ரோகித் ஆர்யா துப்​பாக்​கி​யால் சுட முயன்​றார். இதைத் தொடர்ந்து போலீ​ஸார் நடத்​திய என்​க​வுன்ட்​டரில் ரோகித் ஆர்யா குண்​டு​கள் பாய்ந்து சரிந்து விழுந்​தார். உடனடி​யாக அவர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​

வர்​கள் தெரி​வித்​தனர். ஆர்​.ஏ. ஸ்டூடியோ​வில் பிணைக்​கை​தி​களாக பரித​வித்த 17 சிறு​வர், சிறுமியரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து மும்பை போலீ​ஸார் கூறும்​போது, “இயக்​குநர் என்று கூறிவந்த ரோகித் ஆர்யா மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர் போன்று தெரி​கிறது. கடன் தொல்​லை​யில் சிக்​கி​யிருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அவர் விபரீத​மாக முடிவு எடுப்​ப​தற்கு முன்​பாக கழி​வறை ஜன்​னலை உடைத்து நுழைந்து என்​க​வுன்ட்​டர் நடத்தி சிறு​வர், சிறுமியரை மீட்​டோம். இவர்​கள் 13 வயது முதல் 17 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள். ஒரு மு​தி​ய​வர், ஓர் இளைஞரும் மீட்​கப்​பட்​டனர். ஆர்.ஏ. ஸ்டூடியோ​வில் இருந்து ஒரு துப்​பாக்​கி, ரசாயன பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன” என்​றனர்​.



Read More

Previous Post

இன்டபோலின் சிவப்பு பட்டியலில் 216 இலங்கையர்…! நாடு கடத்த அரசு நடவடிக்கை

Next Post

ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? – உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள் | how jemimah rodrigues helps team india in womens world cup to reach final

Next Post
ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? – உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள் | how jemimah rodrigues helps team india in womens world cup to reach final

ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? - உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள் | how jemimah rodrigues helps team india in womens world cup to reach final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin