• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆடம் ஸாம்பா சுழலில் சுருண்டது நமீபியா: சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா | T20 WC | namibia vs Aus highlights

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆடம் ஸாம்பா சுழலில் சுருண்டது நமீபியா: சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா | T20 WC | namibia vs Aus highlights
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.

ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான மைக்கேல் வான் லிங்கன் 10, நிக்கோலஸ் டாவின் 2 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஜான் ஃப்ரிலிங்க் 1 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்திலும், சுமித் 3 ரன்னில் நேதன் எலிஸ் பந்திலும் நடையை கட்டினர்.

18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நமீபியா அணி நடு ஓவர்களில் ஆடம் ஸம்பாவின் சுழலில் மேலும் ஆட்டம் கண்டது. அவரது சுழலில் ஜேன் கிரீன் (1), டேவிட் வைஸ் (1), ரூபன் ட்ரம்பெல்மான் (7), பெர்னார்டு (0) நடையை கட்டினர். 43 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதவித்த நிலையில் கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் சீராக ரன்கள் சேர்த்ததால் நமீபியா அணி 70 ரன்களை கடந்தது.

நிதானமாக விளையாடி வந்த எராஸ்மஸ் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தநிலையில் மார்கஸ்ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பென் ஷிகொங்கோ ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட நமீபியாவின் இன்னிங்ஸ்72 ரன்களுக்கு நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

73 ரன்கள் இலக்குடன் பேட் செய்த செய்த ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வைஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் கேப்டன் மிட்செல் மார்ஷ் 9 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் வரும் 16-ம் தேதி மோதுகிறது.

நமீபியா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தற்போதைய தோல்வியால் நமீபியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் 15-ம் தேதி மோதுகிறது.

\



Read More

Previous Post

”400 தொகுதிகள்” மோடி பிரச்சாரத்தால் தோல்வி

Next Post

தங்கம் இறக்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி முடிவு

Next Post
தங்கம் இறக்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி முடிவு

தங்கம் இறக்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடு... மத்திய அரசு அதிரடி முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin