• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 03, 2026 1:33 PM IST

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. அபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தனர்.

India vs Pakistan
India vs Pakistan

ஆசிய விளையாட்டு தொடர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவர்ஷினி களமிறங்கினர்.

தனது வழக்கமான அதிரடியை தொடங்கிய வேகத்தில் வைபவ் 15 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 21 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. பாகிஸ்தான் சார்பில் அஹ்மத் தனியல் மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். தொடக்க வீரர்கள் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் (10), மாஸ் சதகத் (23), உஷ்மான் கான் (3) என்ற ரன்களில் அவுட்டாகினர். அசன் நவாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணி தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஒவர்கள் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Read More

Previous Post

‘பிகில் பாண்டியம்மா’ தெரியுமா.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக எம்பி பதிலடி | “Do You Know ‘Bigil’ Pandiyamma?” – Former DMK MP Retaliates Against Minister Nirmal Kumar

Next Post

போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் ரூ. 4.45 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம் – Sri Lanka Tamil News

Next Post
போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் ரூ. 4.45 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம் – Sri Lanka Tamil News

போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் ரூ. 4.45 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin