• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி; இறுதிப் போட்டியில் மோதுமா? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி; இறுதிப் போட்டியில் மோதுமா? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கிரிக்கெட்
/
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி; இறுதிப் போட்டியில் மோதுமா?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் தரவரிசை அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.


ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரில், பலத்த மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச தரவரிசை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதன் மூலம் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள போதிலும், பாகிஸ்தானின் இறுதிப் போட்டிப் பயணத்திற்கு பங்களாதேஷ் பெரும் சவாலாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திங்கட்கிழமை நிஷின் நகரில் உள்ள குரோகி விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்த காலிறுதிப் போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. முதலாவது காலிறுதியில் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் தொடர் மழை மற்றும் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக நாணய சுழற்சி கூட நடத்தப்படாமல் கைவிடப்பட்டது.

போட்டி விதிகளின்படி, காலிறுதி ஆட்டங்கள் மழையினால் கைவிடப்படும் பட்சத்தில் சர்வதேச தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அதனடிப்படையில், ஐசிசி சர்வதேச இருபதுக்கு 20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா மற்றும் சிறந்த தரவரிசையைக் கொண்ட பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் எவ்வித போட்டிகளுமின்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணியில் 15 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்சி களமிறங்குவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதிலும் மழை அதற்கு தடையாக அமைந்தது.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், அதே நாளில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதும்.

இரு அணிகளும் தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உருவாகும்.

எனினும், மலேசியாவை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில், அது பாகிஸ்தானுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்பதால் இறுதிப் போட்டி நிலவரம் இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியில் ‘சர்தார் 2’.. ரிலீஸ் எப்போது தெரியுமா? …

Next Post

636 ஆண்டுகள் பழமையான மசூதி கும்பமேளாவுக்காக இடிப்பு? விடிய விடிய போராட்டம்! உஜ்ஜைனில் பரபரப்பு | Ujjain Shahi Mosque controversy explained: Madhya Pradesh High Court to Hear Plea Over Road Widening

Next Post
636 ஆண்டுகள் பழமையான மசூதி கும்பமேளாவுக்காக இடிப்பு? விடிய விடிய போராட்டம்! உஜ்ஜைனில் பரபரப்பு | Ujjain Shahi Mosque controversy explained: Madhya Pradesh High Court to Hear Plea Over Road Widening

636 ஆண்டுகள் பழமையான மசூதி கும்பமேளாவுக்காக இடிப்பு? விடிய விடிய போராட்டம்! உஜ்ஜைனில் பரபரப்பு | Ujjain Shahi Mosque controversy explained: Madhya Pradesh High Court to Hear Plea Over Road Widening

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin