Last Updated:
பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன
ஆசிய நாடுகளில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 கடந்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வெள்ள பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தோனேஷியா, இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் அதைத் தொடர்ந்து நடந்த நிலச்சரிவுகள் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தோனேசியாவில் ஒரு சில கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதே போன்று மலேசியாவிலும் மிகப்பெரிய அளவுக்கு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு மூன்று பேர் உயிரிழந்து உள்ளார்கள்.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ள பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், தென்கிழக்கு ஆசியாவில் அடுத்த ஆண்டும் காலநிலை மிக மோசமானதாக இருக்கும். அதற்கடுத்த ஆண்டுகளிலும் இதே போன்ற நிலைமை தொடர வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
December 03, 2025 9:22 PM IST


