Last Updated:
ஆசிய போட்டிகளை பொருத்தளவில் சிப்ட்கவுர் சம்ரா பெறும் 4 ஆவது பதக்கம் இதுவாகும்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சிப்ட்கவுர் சம்ரா 2 தங்க பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் கஜகஸ்தான் நாட்டின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா, தனிநபர் பிரிவிலும், அணிப் பிரிவிலும் என இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தனி நபர் பிரிவில் இறுதிப் போட்டியில் அவர் 459.2 புள்ளிகளைப் பெற்று, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதில், அவர் சீனாவின் யாங் யூஜி யை வீழ்த்தினார். யூஜிக்கு மொத்தம் 458.8 புள்ளிகள் கிடைத்தன.
தனிப்பட்ட வெற்றியுடன், அஞ்சும் மௌட்கில் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோருடன் இணைந்து, ஒட்டுமொத்தமாக 1753 புள்ளிகளைப் பெற்று அணிப் பிரிவிலும் சிப்ட்கவுர் சம்ரா தங்கப் பதக்கத்தை வென்றார்.
சிப்ட் கவுர் சம்ரா, தகுதிச் சுற்றில் 589 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதல் அவர் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
August 26, 2025 5:35 PM IST


