• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 24 பதக்கத்துடன் 2-வது இடம் பிடித்தது இந்தியா! | Asian Athletics Championships India finishes in second spot with 24 medals

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 24 பதக்கத்துடன் 2-வது இடம் பிடித்தது இந்தியா! | Asian Athletics Championships India finishes in second spot with 24 medals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 2-வது இடம் பிடித்தது.

இது கடந்த 2023-ம் ஆண்டு கைப்பற்றிய பதக்க எண்ணிக்கையைவிட3 குறைவாகும். தாய்லாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 27 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆனால் இம்முறை இந்தியா கூடுதலாக 2 தங்கம் வென்றுள்ளது. 2023-ல் 6 தங்கம் வென்றிருந்த நிலையில் தற்போது 8 தங்கம் வென்று அசத்தி உள்ளது.

சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து முலிடமும், ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3-வது இடமும் பிடித்தன.

கடைசி நாளான நேற்று இந்தியா வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:15.33 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சச்சின் யாதவ் 85.16 மீட்டர் தூரம் எட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (86.40) தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

மகளிருக்கான 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அபிநயா ராஜராஜன், சினேகா, ஸ்ரபானி நந்தா, நித்யா காந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 43.86 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் (20.32 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பூஜா (2:01.89 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் (56.46 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.



Read More

Previous Post

நண்பரை நம்பிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்… ஆறு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Next Post

பாதாள குழுக்களுக்கு முடிவு : அநுர அரசிடம் அமைச்சு பதவி கேட்கும் பொன்சேகா

Next Post
பாதாள குழுக்களுக்கு முடிவு : அநுர அரசிடம் அமைச்சு பதவி கேட்கும் பொன்சேகா

பாதாள குழுக்களுக்கு முடிவு : அநுர அரசிடம் அமைச்சு பதவி கேட்கும் பொன்சேகா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin