• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை 2025 : உடல் தகுதியை நிரூபிக்க தீவிரம் காட்டும் வீரர்கள்.. உத்தேச இந்திய அணி இதுதான்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
ஆசிய கோப்பை 2025 : உடல் தகுதியை நிரூபிக்க தீவிரம் காட்டும் வீரர்கள்.. உத்தேச இந்திய அணி இதுதான்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 11, 2025 9:25 PM IST

கடந்த மாதம் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ச்சி பெற்றார்

இந்திய அணி (File)இந்திய அணி (File)
இந்திய அணி (File)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் உடல் தகுதியை நிரூபிக்க இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துவிட்டு இந்தியா திரும்பி உள்ளது. இங்கிலாந்து தொடர் குறித்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அசைன்மென்டான ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் 8 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களுக்கான பிட்னஸ் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ச்சி பெற்றார். அவர் ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு இன்று உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நாளையும் அவருக்கு முக்கிய சோதனைகள் உள்ளன. இதே போன்று இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் சமீபத்தில் ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அதிலிருந்து அவர் மீண்டு வரும் நிலையில் சூரியகுமார் முழுமையாக திரும்புவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் பின்வரும் வீரர்கள் இடம் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோனி, ரிஷப் பந்த் கிடையாது.. உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான்.. முன்னாள் கேப்டன் கருத்து

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, க்ருணால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 11, 2025 9:25 PM IST

Read More

Previous Post

மேலும் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் | ECI starts proceedings to delist another 476 RUPPs

Next Post

கிரெடிட் கார்டுகள், தங்க கடன், வீட்டு கடன், தனிநபர் கடன்.. எது பெஸ்ட்?

Next Post
கிரெடிட் கார்டுகள், தங்க கடன், வீட்டு கடன், தனிநபர் கடன்.. எது பெஸ்ட்?

கிரெடிட் கார்டுகள், தங்க கடன், வீட்டு கடன், தனிநபர் கடன்.. எது பெஸ்ட்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin