Last Updated:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெறும் இந்திய அணியின் மற்ற வீரர்கள் யார் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் இந்த முறை டி20 ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14 ஆம் தேதி பாகிஸ்தானையும், 19ஆம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள். இதுவரை நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணி எட்டு முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி நாளை மறுதினம் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காயம் காரணமாக ஓய்வில் இருந்த டி20 இந்திய அணிக்கான கேப்டன் சூர்யா குமார் யாதவ் தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.
அவர் கடைசியாக ஐபிஎல் தொடரில் விளையாடினார். அவருக்கு வயிற்றின் கீழ்ப்பகுதியில் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
August 17, 2025 6:55 PM IST


