Last Updated:
மற்றொரு போட்டியில் ஜப்பான் 7-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பிகாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வரும் தொடரில், இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. முதல்பாதியில் இரு கோல்களுடன் முன்னிலையில் இருந்த இந்தியா இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்…
முன்னதாக காலையில் நடைபெற்ற முதலாவது போட்டியில், வங்கதேசத்தை 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் கொரியா 7-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில் ஜப்பான் 7-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.
தேசிய விளையாட்டான ஹாக்கியை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பீகாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான டிக்கெட்டுகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
August 30, 2025 4:24 PM IST


