Last Updated:
லீக் சுற்று முடிவுகளின்படி பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், ஜப்பானும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 12 கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் குவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. இவை ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் சீனா, தென்கொரியா, மலேசியா மற்றும் தைபே அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம்பெற்றுள்ள. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 பிரிவுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் இந்திய வீராங்கனைகள் நவ்நீத் மற்றும் மும்தாஸ் கான் ஹாட்ரிக் கோல் அடித்த அசத்தினார்கள்.
மொத்தம் 12 கோல்களை அடித்த இந்திய அணி தடுப்பாட்டத்திலும் அபாரமாக செயல்பட்டு சிங்கப்பூர் அணி 1 கோல் கூட அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டு வெற்றி பெற்றது.
முன்னதாக தனது தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்தியா 11-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பான் உடனான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.
September 08, 2025 5:47 PM IST