Last Updated:
இந்திய பவுலர்கள் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், கிலன் படேல், ஹெனில் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆசிய கோப்பை யு19 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து இந்திய அணி 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 12 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு நாள் போட்டித் தொடரின் மகுடத்துக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மாத்ரே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 9 சிக்சருடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அகமது உசைன் 56 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 347 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய பவுலர்கள் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், கிலன் படேல், ஹெனில் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


