Last Updated:
இந்திய அணியின் சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை இந்திய அணியின் குல்தீப் யாதவ் ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை இலங்கை அணியின் பிரபல பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வசம் இருந்தது. அந்த ரெக்கார்டை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியது. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று உலகின் வலிமையான கிரிக்கெட் அணி என்ற பெயரைப் பெற்றுள்ளது.
குறிப்பாக ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு முக்கிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அவற்றில் பவுலர் குல்தீப் யாதவ் ஏற்படுத்தியுள்ள சாதனை பாராட்டைப் பெற்று வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் T20 மற்றும் ஒரு நாள் என இரண்டு ஃபார்மேட்களில் நடத்தப்படும். அதாவது போட்டி தொடருக்கு பின்னர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் T20 ஃபார்மெட்டில் நடத்தப்படும்.
அந்த வகையில் 2026 உலக கோப்பை தொடரை குறிக்கும் வகையில் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் T20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டது. இதில் குல்தீப் யாதவ் மொத்தம் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆசிய கோப்பை தொடர்களில் அவர் ஒட்டுமொத்தமாக 36 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
September 29, 2025 5:00 PM IST


