[ad_1]
Last Updated:
ஆசியா கிரிக்கெட் கவுன்சில் ஐந்து நாடுகளை நிரந்தர ஆசிய கோப்பை தொடருக்கான நாடுகள் என அறிவித்துள்ளது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. அவை 2 பிரிவுகளாக ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி போட்டிகளை எதிர் கொள்ள உள்ளது.
துணை கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேபாள அணி ஆசியாவுக்குள் இருந்த போதிலும் அந்த அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்த விவாதங்கள் கிரிக்கெட் உலகில் எழுந்த நிலையில் அது பற்றி நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். ஏனென்றால் கடந்த ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணி விளையாடியது. அப்போது 6 அணிகள் மட்டுமே போட்டியில் விளையாடின.
ஆசியா கிரிக்கெட் கவுன்சில் ஐந்து நாடுகளை நிரந்தர ஆசிய கோப்பை தொடர்கான நாடுகள் என அறிவித்துள்ளது. அதில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. மற்ற நாடுகள் அதாவது மற்ற மூன்று நாடுகள் ஆசிய கோப்பை பிரிமியர் தொடரில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது.
September 08, 2025 9:44 PM IST