[ad_1]
Last Updated:
தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரர் ஒருவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. போட்டியில் இடம் பெற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சுற்றில் இந்த நாடுகள் மற்ற அணிகளுடன் மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்று முன்னேறும். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யா குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இதே துணை கேப்டன் பொறுப்பில் அக்சர் படேல் செயல்பட்டு வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் முக்கிய வீரர் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருந்தார். அவர் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது மற்றொரு விக்கெட் கீப்பரான ஜிதேஷ் சர்மா அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சஞ்சு சாம்சன் அதிகமாக பயிற்சியில் ஈடுபடவில்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால், அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டி தொடரில் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் திறமையான கிரிக்கெட்டர்களாக இருக்கும் சூழலில், வீரர்களைத் தேர்வு செய்வது என்பது கேப்டன் சூர்யா குமார் யாதவிற்கும், பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
September 07, 2025 4:21 PM IST