Last Updated:
முந்தைய சுற்றுப் போட்டிகளில் முன்னாள் சாம்பியன்கள் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டியில் படுதோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.
19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோற்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 192 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முந்தைய சுற்றுப் போட்டிகளில் முன்னாள் சாம்பியன்கள் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டியில் படுதோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில், நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றதற்கான காரணம் குறித்து இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் (Hrishikesh Kanitkar) ஆகியோரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜனவரி – பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன் இந்திய அணியில் உள்ள பிரச்னைகளை களைய பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


