Last Updated:
8 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று போட்டி தொடர் நடத்தப்பட உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு குறித்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிவிப்பு பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி அதே மாதம் 21ஆம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.
8 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று போட்டி தொடர் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற்றம் அடையும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். குரூப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டுள்ள இரு பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் ஆகிய நாடுகள் குரூப் ஏ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் குரூப் டி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரை இந்தியா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது இந்திய மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டமான சூழல் காரணமாக ஆசிய கோப்பை தொடரை பொதுவான இடத்தில் நடத்துவது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்திருந்தது.
July 24, 2025 6:07 PM IST


