[ad_1]
Last Updated:
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது
இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள இந்திய அணி பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 8 அணிகள் மோதுகின்றன. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஆசிய அணிகள் தயாராகும் விதமாக இந்த கிரிக்கெட் தொடர் T20 ஃபார்மேட் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக ஏ, பி என பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் ஏ மற்றும் பி பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று இந்திய அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
September 05, 2025 3:11 PM IST