Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாட உள்ளது. ஆசியக்கோப்பைக்கு முன் இந்த சுற்றுப்பயணம் முக்கியமானது.
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் மிர்பூரில் முறையே வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 20 ஆம் தேதியும் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் முதல் டி20 போட்டி மட்டும் ஆகஸ்ட் 26-ல் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு டி20 போட்டிகள் அதே மாதம் 29 மற்றும் 31ஆம் தேதி மிர்பூரிலும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தாண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக வங்கதேச சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் நடக்க இருக்கும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அட்டவணை அறிவிக்கப்பட்டாலும் கேப்டன் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஐபிஎல் உள்ளிட்ட தொடர்கள் நடப்பதால் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து தொடர் வரவிருப்பதால் அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.
Mumbai,Maharashtra
April 16, 2025 6:53 AM IST


