
அதிவேகப் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி (Seat Belt) விதிமுறையை மீறியமைக்காக சுமார் 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான சாரதிகளும் பயணிகளும் இந்த விதியைக் கடைப்பிடித்தபோதிலும், சிலர் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகப் போக்குவரத்துப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
அதிவேகப் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

