Last Updated:
டெல்லி துர்க்மான்கேட் மசூதி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கையில் கலவரம் வெடித்தது.
டெல்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின்போது காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது.
டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு 32 பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கட்டடங்களை இடித்து அகற்றினர். மசூதியை சுற்றி இருந்த குடியிருப்புகள், கட்டுமானங்கள் அனைத்தும் புல்டோசர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
இதனால் கொந்தளிப்படைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், போராட்டம் நடத்திய மக்களை கலைக்க முயன்றனர்.
அப்போது, அங்கு கலவரம் வெடித்ததால் மக்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பொதுமக்கள் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் யார் என்பது வீடியோக்கள் மூலம் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


