Last Updated:
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து, உயர்நீதிமன்ற உத்தரவை நிலைநிறுத்தியது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடைகோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ஊழல் நடைபெற்றதாகக் கூறி, கடந்த மே மாதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
இருப்பினும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால், நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடரப்பட்டு, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்ததோடு, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
November 10, 2025 6:31 PM IST


