Last Updated:
பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI-ல் (Unified Payment Interface) வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இது யூஸர்கள், வங்கிகள் மற்றும் வணிகர்களை கணிசமாகப் பாதிக்கக்கூடும்.
UPI-ஐ ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் கொண்ட இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), நாட்டின் மிக முக்கிய டிஜிட்டல் பேமென்ட் பிளாட்ஃபார்மில் சில ஒழுங்குமுறை மாற்றங்களை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் UPI-ஐ மிகவும் நம்பகமானதாகவும், தடையற்ற பயன்பாட்டிற்கு குறிப்பாக பீக் ஹவர்களில் இடையூறுகள் குறைவாக இருக்குமாறு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 12 & மார்ச் 26 ஆகிய தேதிகளில் பேமென்ட் சிஸ்டமில் ஏற்பட்ட இரண்டு பெரிய பாதிப்புகளை அடுத்து (கோடிக்கணக்கான யூஸர்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிவர்த்தனைகள் தடைபட்டன) இந்த மாற்றங்கள் வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) “வளர்ந்து வரும் சில்லறை டிஜிட்டல் கொடுப்பனவுகள்: இயங்குதன்மையின் மதிப்பு” என்ற சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் நிகழ்நேர கட்டண தொழில்நுட்பமான UPI, விசாவை விஞ்சி உலகளவில் முன்னணியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட்ஸ்களில் 85 சதவீதத்தையும், உலகளவில் கிட்டத்தட்ட 60 சதவீத டிஜிட்டல் பேமென்ட்ஸ்களும் UPI-ஆல் இயக்கப்பட்டுள்ளதாக IMF-ன் அறிக்கை கூறுகிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் UPI-யில் என்னென்ன புதிய மாற்றங்கள்?
அனைத்து வங்கிகள் மற்றும் பேமென்ட் ஆப்ஸ்களுக்கான ஆட்டோ பே மற்றும் பேலன்ஸ் செக் அம்சங்களுக்கான மாற்றங்கள் தொடர்பான புதிய API பயன்பாட்டு விதிகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளன.
தற்போது வரை UPI யூஸர்களுக்கு வரம்பற்றதாக இருந்துவரும் அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்வது, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே என்ற வரம்புக்குள் வருகிறது. அதாவது UPI யூஸர்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க முடியும்.
ஆட்டோ-பேமென்ட்டிற்கு நிலையான டைம்-ஸ்லாட்ஸ்கள்:
UPI ஆட்டோ-பேமென்ட்ஸ்களுக்கு, NPCI-ஆனது நிலையான டைம்-ஸ்லாட்ஸ்களை நிர்ணயித்துள்ளது. பகலில் சீரற்ற முறையில் செயலாக்கப்படுவதற்கு பதிலாக சப்ஸ்கிரிப்ஷன்கள், EMI-க்கள் மற்றும் பயன்பாட்டு பில்கள் போன்ற பேமென்ட்ஸ்களுக்கான ஆட்டோ-பேமென்ட்ஸ்கள் இனி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கையாளப்படும்.
இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவது, குறிப்பிட்ட பேமென்ட் பிளாட்ஃபார்ம்களின் வேகத்தை மேம்படுத்தி ஒரே நேரத்தில் பல பேமென்ட்ஸ்கள் செய்யப்படுவதற்கான நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்காது, ஏனெனில் அவர்களின் ஆட்டோ-பேமென்ட் செலுத்தும் வசதி வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், வணிகங்கள் தங்கள் கட்டண வசூல் அட்டவணையை டைம்-ஸ்லாட்ஸ்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
July 29, 2025 5:38 PM IST