
அஸ்வெசும நலத்திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளுக்கான ஜனவரி மாத உதவித்தொகை நாளை (28) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதேபோல், இரு கட்டங்களுக்கும் பொருந்தும் ஜனவரி மாத முதியோர் உதவித்தொகையும் அதே நாளில் பயனாளிகளின் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் தகுதி பெற்ற குடும்பங்களுக்கும் முதியோர்களுக்கும் தேவையான நிதி ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

