சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் மகள்களிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தன் மகள்களுக்கு கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அஸ்வின் தான் விளையாடிய 15 போட்டிகளில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் டெஸ்ட் தொடரில் 500 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

