அவுஸ்ரேலியாவில் யூதர்களை குறிவைக்து இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலியர்களை கவர்ந்த சுற்றுலாத்தலமாக இலங்கை மாறியுள்ள நிலையில் அவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர் அவுஸ்ரேலியாவில் யூதர்களை இலக்குவைக்கு இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என குறிப்பிட்டார்.
பூகோள அரசியலை தெளிவாக விளங்கவேண்டும்
இலங்கையில் இஸ்லாத்தை தடை செய்யப்போவதில்லை, குரானை தடை செய்யப்போவதில்லை அவ்வாறு செய்யவும் முடியாது.

ஆனால் இலங்கை முஸ்லிம் சமுகம் பூகோள அரசியல் விடயங்கள் தொடர்பில் மிகத்தெளிவாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

